டி20 உலககோப்பை 2026: முதல் முறையாக தகுதி பெற்று இத்தாலி அணி சாதனை


டி20 உலககோப்பை 2026: முதல் முறையாக தகுதி பெற்று இத்தாலி அணி சாதனை
x

Image Courtesy: @ICC

2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றிருக்கிறது.

துபாய்,

2026-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இம்முறை, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. உலகம் முழுவதும், இதற்கான தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா பகுதி, ஆப்ரிக்கா பகுதி, ஆசியா பகுதி, ஐரோப்பா பகுதி போன்ற பல பகுதிகளிலும் தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஐரோப்பா பகுதி தகுதிச்சுற்று போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

ஐரோப்பா பகுதி தகுதிச்சுற்றில், நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்ஸி ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், கடைசி நேரத்தில், இத்தாலிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, நெதர்லாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற அணியாக, ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.

அடுத்து, எஞ்சி ஒரு இடம் இருந்தது. இந்த ஒரு இடத்திற்கு இத்தாலி மற்றும் ஜெர்ஸி ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருந்த நிலையில், இறுதியில் இருவரும் தலா 5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தார்கள். ஆனால், ஜெர்ஸி அணியின் நெட் ரன்ரேட் +0.0306 ஆக இருந்த நிலையில், இத்தாலி நெட் ரன்ரேட் +0.612 ஆக இருந்தது. இதனால், இத்தாலி அணி தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story