தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு

கோப்புப்படம்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெறுகிறது. முதலாவது டி20 போட்டி வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடல்தகுதியை பொறுத்து போட்டிகளில் விளையாடுவது முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் விவரம் வருமாறு:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரிட் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.






