இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர்கள் விலகல்


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர்கள் விலகல்
x
தினத்தந்தி 6 Dec 2025 3:37 PM IST (Updated: 6 Dec 2025 3:41 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி 9-ம் தேதி நடைபெற உள்ளது.

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.

இவர்களில் டோனி டி சோர்ஜி இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தொடை பகுதியில் காயமடைந்தார். மறுபுறம் குவேனா மபாகா ஏற்கனவே ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் விலகியுள்ளார். குவேனா மபாகாவுக்கு பதிலாக லூதோ சிபாம்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க டி20 அணி: மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, லூதோ சிபாம்லா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

1 More update

Next Story