ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருது வென்றது யார்..?


ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருது வென்றது யார்..?
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கான்பெர்ராவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன் எடுத்திருந்த போது இடி மற்றும் மின்னல் காரணமாக ஆட்டம்நிறுத்தப்பட்டது. அப்போது அபிஷேக் ஷர்மா 23 ரன்களுடனும் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மன் கில் 29 ரன்களுடனும் (16 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இடி, மின்னலை அடுத்து சற்று நேரத்தில் மழையும் பலமாக கொட்டியது. மழை தொடர்ந்து பெய்ததால் 2¼ மணி நேர பாதிப்புக்கு பிறகு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஒவ்வொரு தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு ‘இம்பேக்ட் வீரர் விருது’ வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த தொடருக்கான இம்பேக்ட் வீரராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதுக்கான பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

1 More update

Next Story