டி20 கிரிக்கெட்: வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்த ஆல் டைம் பிளேயிங் லெவன்.. கேப்டன் யார் தெரியுமா..?


டி20 கிரிக்கெட்: வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்த ஆல் டைம் பிளேயிங் லெவன்.. கேப்டன் யார் தெரியுமா..?
x

வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான வெங்கடேஷ் ஐயர், டி20 வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.

அவரது அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திர வீரர்களை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார். அதேபோல் இளம் வீரரான அபிஷேக் சர்மாவை தேர்வு செய்து கவனத்தை ஈர்த்துள்ளார். அத்துடன் அந்த அணிக்கு மகேந்திரசிங் தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்த ஆல் டைம் டி20 பிளேயிங் லெவன்: வீரேந்திர சேவாக், அபிஷேக் சர்மா, பென் ஸ்டோக்ஸ், ஏபி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்ட்யா, எம்எஸ் தோனி (கேப்டன்), லசித் மலிங்கா, ரஷித் கான், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் மேத்யூ ஹைடன் (இம்பேக்ட் பிளேயர்).

1 More update

Next Story