பாகிஸ்தான் உள்பட 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர்: சார்ஜாவில் நடக்கிறது

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாய்,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் வருகிற 29-ந் தேதி முதல் செப்.7-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story