சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: மும்பை அணி அறிவிப்பு.. இந்திய நட்சத்திர வீரர்களுக்கு இடம்

image courtesy:PTI
ஷர்துல் தாகூர் தலைமையில் மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
38 அணிகள் இடையிலான சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை அணி ஷர்துல் தாகூர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் நட்சத்திர வீரர்களான சர்பராஸ் கான், ஷிவம் துபே, ரஹானே, ஆயுஷ் மாத்ரே, துஷார் தேஷ்பாண்டே உள்பட 17 பேர் அந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
மும்பை அணி விவரம்:
ஷர்துல் தாகூர் (கேப்டன்), ரகானே, ஆயுஷ் மாத்ரே, ரகுவன்ஷி, சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், சர்பராஸ் கான், ஷிவம் துபே, சாய்ராஜ் படில், முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், அதர்வா, தனுஷ் கோட்டியான், ஷாம்ஸ் முலானி, துஷார் தேஷ்பாண்டே, இர்பான் உமைர் மற்றும் ஹர்திக் தமோர்.
Related Tags :
Next Story






