சேப்பாக்கத்தில் முதல் முறையாக வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின
சென்னை,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 43வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்கத்தில் ஐதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இதற்குமுன் சென்னை - ஐதராபாத் அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் 5 ஆட்டத்திலும் சென்னை வெற்றிபெற்றிருந்தது.
தற்போது நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் வெற்றியை ஐதராபாத் பதிவு செய்துள்ளது. மேலும், சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியின் கடந்த கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.