டெஸ்ட் அணியில் ஷமி நீக்கம்... சி.எஸ்.கே. வீரருக்கு வாய்ப்பு - வெளியான தகவல்


டெஸ்ட் அணியில் ஷமி நீக்கம்... சி.எஸ்.கே. வீரருக்கு வாய்ப்பு - வெளியான தகவல்
x

image courtesy:PTI

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் நியமிக்க வேண்டி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியினர் மற்றும் புதிய கேப்டன் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் கூட்டணியாகப் பந்துவீசுவதற்காக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட உள்ளார். அவர்களுடன் ஹர்ஷித் ராணாவும் இடம் பெறுவார்.

இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை இருக்கும் என்பதால், கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் சி.எஸ்.கே அணிக்காக ஆடி வரும் அன்ஷுல் காம்போஜ் ஆகிய இருவரையும் அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

1 More update

Next Story