நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: மும்பை வந்த விராட் கோலி

நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11ஆம் தேதி நடக்க உள்ளது. ஜன. 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. டி20 போட்டிகளை பொறுத்தவரை ஜன.21, 23,25, 28,31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று லண்டனில் இருந்து மும்பை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






