இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் முத்துசாமி


இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: சதம் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் முத்துசாமி
x

2வது டெஸ்ட் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

கவுகாத்தி,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. செனுரன் முத்துசாமி 25 ரன்களுடனும், வெர்ரைன் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் முத்துசாமி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். செனுரன் முத்துசாமி சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட்டில் முத்துசாமி விளாசிய முதல் டெஸ்ட் சதம் இதுவாகும். அவர் 206 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் குவித்து அவுட் ஆனார். வெர்ரைன் 45 ரன்களில் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மார்கோ 70 ரன்களிலும், ஹார்மர் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story