ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ருதுராஜ்


ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ருதுராஜ்
x

முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். அவரது தலைமையில் விளையாடிய சென்னை அணி நடப்பு சீசனில் 5 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அறிவித்துள்ளார். இன்று நடைபெற உள்ள கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலிருந்து தோனி கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்த நிலையில் ,ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ருதுராஜ் கூறியதாவது,

"லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன். 2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story