தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை தவறவிடும் பேட் கம்மின்ஸ்..?

கோப்புப்படம்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது.
கான்பெர்ரா,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருட இறுதியில் ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு கம்மின்ஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒரு பகுதியாகதான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.