இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
லாகூர்,
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் (ஜனவரி) இலங்கைக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜன.7, 9, 11-ந்தேதிகளில் தம்புல்லாவில் நடக்கிறது. இந்த நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி:
சல்மான் ஆகா (கேப்டன் ) , அப்துல் சமத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், கவாஜா நபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், உஸ்மான் கானாப், உஸ்மான் கான், ஷதாப் கான்.
ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, முகமது ரிஸ்வான் ஆகியோரது பெயர் அணித் தேர்வில் பரிசீலிக்கப்படவில்லை.






