தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்த உடன் ஒருநாள் போட்டிகள் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளன. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி டிசம்பர் 3-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அக்சர் படேல் மற்றும் முகமது சிராஜ் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்.

1 More update

Next Story