ஒருநாள் கிரிக்கெட்; மிட்செல் ஹே அதிரடி... பாகிஸ்தானுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து


ஒருநாள் கிரிக்கெட்; மிட்செல் ஹே அதிரடி... பாகிஸ்தானுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
x

Image Courtesy: X (Twitter) / File Image

நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மிட்செல் ஹே 99* ரன்கள் எடுத்தார்.

ஹாமில்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிந்துள்ள நிலையில் 1-0 என்ற நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்து தொடக்க வீரர்களாக ரைஸ் மாரியு மற்றும் நிக் கெல்லி களம் புகுந்தனர்.

இதில் ரைஸ் மாரியு 18 ரன்னிலும், நிக் கெல்லி 31 ரன்னிலும், அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஹென்றி நிக்கோல்ஸ் 22 ரன், டேரில் மிட்செல் 18 ரன், மைக்கேல் பிரேஸ்வெல் 17 ரன், முகமது அப்பாஸ் 41 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து மிட்செல் ஹே மற்றும் நாதன் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். இதில் நாதன் ஸ்மித் 8 ரன்னில் அவுட் ஆனார்.

மறுபுறம் அதிரடியாக ஆடிய மிட்செல் ஹே அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 292 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் ஹே 99* ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் ஜூனியர், சுபியான் முஹீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட உள்ளது.


Next Story