வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி
x

டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

நேப்பியர் ,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவர் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷாய் ஹோப் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே 90 ரன்கள் சேர்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

1 More update

Next Story