இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்க உள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் பங்கேற்க உள்ள நியூசிலாந்து அணி அறிவிப்பு
x

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 - 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜன. 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டிகளை பொறுத்தவரை ஜன.21, 23,25, 28,31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதையொட்டி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு --

நியூசிலாந்து டி20 அணி:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன், இஷ் சோதி

நியூசிலாந்து ஒருநாள் அணி

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவோன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்

1 More update

Next Story