டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவிப்பு

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பு ,
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் . ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்காளதேசத்தத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெறுகிறார்.
இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் விளக்கமளித்துள்ளார்.
118 டெஸ்ட் போட்டிகளில், மேத்யூஸ் 44.62 சராசரியுடன் 8,167 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்த 3வது வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளார்.
Related Tags :
Next Story