ஜூனியர் ஆசிய கோப்பை: தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா


ஜூனியர் ஆசிய கோப்பை: தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
x

image courtesy:twitter/@ACCMedia1

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது.

துபாய்,

8 அணிகள் இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (ஜூனியர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அரையிறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி, மலேசியா உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 408 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 209 ரன்கள் அடித்தார். மலேசியா தரப்பில் முகமது அக்ரம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மலேசியா அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 32.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த அந்த அணி 93 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அபிக்யான் குண்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story