தமிழக அணியின் கேப்டனாக ஜெகதீசன் நியமனம்


தமிழக அணியின் கேப்டனாக ஜெகதீசன் நியமனம்
x
தினத்தந்தி 4 Dec 2025 6:45 AM IST (Updated: 4 Dec 2025 6:45 AM IST)
t-max-icont-min-icon

துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.

இதற்கிடையே, தமிழக அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார். தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் இன்று திரிபுராவை ஆமதாபாத்தில் (மாலை 4.30 மணி) சந்திக்கிறது.

1 More update

Next Story