பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு

image courtesy:ICC
அயர்லாந்து - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 6-ம் தேதி நடைபெற உள்ளது.
டப்ளின்,
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. 2-வது போட்டி 8-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 10-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3 போட்டிகளும் பெல்பாஸ்ட்டில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேபி லூயிஸ் கேப்டனாகவும், ஓர்லா பிரெண்டர்காஸ்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அயர்லாந்து அணி விவரம்:
கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, லாரா டெலானி, ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், ப்ரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்.