ஐ.பி.எல்.: 'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா பெங்களூரு... குஜராத்துடன் இன்று மோதல்


ஐ.பி.எல்.: ஹாட்ரிக் வெற்றி பெறுமா பெங்களூரு... குஜராத்துடன் இன்று மோதல்
x

Image Courtesy: @IPL / @RCBTweets / @gujarat_titans

ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 13லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடக்கும் 14வது லீக் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.

வெளியூரில் அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ள பெங்களூரு இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. அதேவேளையில் முதல் ஆட்டத்தில் பஞ்சாபிடம் வீழ்த்த குஜராத், அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் உள்ளது.

போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம் பேட்டிங்குக்கு கைக்கொடுக்கும். இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிரம்பி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் ரன்வேட்டையை எதிர்பார்க்கலாம். சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் பெங்களூருவும், 2-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story