ஐ.பி.எல்.: 2வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @IPL / @mipaltan / @LucknowIPL
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோத உள்ளன.
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு, குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளன. புள்ளிப்பட்டியலில் மும்பை 6வது இடத்திலும், லக்னோ 7வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் இரண்டாவது வெற்றிக்கு குறிவைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டங்களில் லக்னோவும், ஒன்றில் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.