ஐ.பி.எல். கிரிக்கெட்; குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு


ஐ.பி.எல். கிரிக்கெட்; குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
x

Image Courtesy : @RCBTweets

தினத்தந்தி 2 April 2025 9:28 PM IST (Updated: 2 April 2025 9:32 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் 14 ரன்களும், விராட் கோலி 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ரஜத் படிதார் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடி அரைசதம் கடந்த லியாம் லிவிங்ஸ்டன் 54 ரன்களில் கேட்ச் ஆனார். அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசிய ஜிதேஷ் சர்மா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசி பெங்களூரு ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து குஜராத் அணி, 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.


Next Story