ஐ.பி.எல்.: பெங்களூரு - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்


ஐ.பி.எல்.: பெங்களூரு - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @RCBTweets

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் மழை அச்சுறுத்தல் காரணமாக லக்னோவுக்கு மாற்றப்பட்டது.

வெற்றிப்பயணத்தை தொடரை பெங்களூரு கடுமையாக போராடும், அதேவேளையில் பெங்களூருவின் வெற்றிப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போட ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை மோதி இருக்கின்றன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story