சர்வதேச கிரிக்கெட்: ரோகித் சர்மா வரலாற்று சாதனை


சர்வதேச கிரிக்கெட்: ரோகித் சர்மா வரலாற்று சாதனை
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் 75 ரன்கள் அடித்தார்.

விசாகப்பட்டினம்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 75 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 180 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 84 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 91 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 30 ரன்கள் அடித்திருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட்) 20,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்கள் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. சச்சின் - 34,357 ரன்கள்

2. விராட் கோலி - 27,910 ரன்கள்

3. ராகுல் டிராவிட் - 24,208 ரன்கள்

4. ரோகித் சர்மா - 20,049 ரன்கள்

1 More update

Next Story