ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்.. சுப்மன் கில் சரிவு

image courtesy:PTI
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோகித் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார்.
துபாய்,
ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். டேரில் மிச்செல் 2-வது இடத்திலும், இப்ராஹிம் சத்ரன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்தியாவின் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் சுப்மன் கில் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 9-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ரஷித் கான் முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திற்கு வந்துள்ளார். இந்த வரிசையில் டாப் -10 இடத்திற்குள் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துலா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் அக்சர் படேல் ஒரு இடம் குறைந்து 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.






