அவர் ஒன்றும் என் உறவினர் அல்ல.. இந்திய அணியின் தோல்விக்கு கம்பீர் மட்டுமே.. - அஸ்வின்


அவர் ஒன்றும் என் உறவினர் அல்ல.. இந்திய அணியின் தோல்விக்கு கம்பீர் மட்டுமே.. - அஸ்வின்
x

image courtesy:PTI

ஒரு பயிற்சியாளரால் என்ன செய்ய முடியும்..? என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 - 0 (3 கணக்கில்) என்ற கணக்கில் தங்களது சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2 - 0 (2 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் வாயிலாக 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதை விட தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சோதனை அடிக்கடி செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள் ஆகியவையும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் பொறுப்பின்றி விளையாடியதால் கிடைத்த தோல்விக்கு கம்பீர் மட்டுமே காரணமில்லை என்று முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே அவரை மட்டுமே ரசிகர்கள் விமர்சிக்க வேண்டாம் என்று அவர் ஆதரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் உங்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறேன். ஒரு பயிற்சியாளர் என்ன செய்ய முடியும்? உங்களை பயிற்சியாளரின் நிலையில் நிறுத்துங்கள். பயிற்சியாளர் வீரருக்கு தொடர்ச்சியான ஆதரவு கொடுக்க வேண்டும், நிறைய மாற்றங்கள் செய்யக்கூடாது என்று நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் விளையாடுவதற்கும் சிறப்பாக செயல்படுவதற்கும் திறனை பெறுவது வீரரின் பொறுப்பு.

"பயிற்சியாளர்தான் பிரச்சனை என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய வீரர்கள் போதுமான அளவு பொறுப்புடன் விளையாடியதாக எனக்கு தெரியவில்லை. ஒரு வீரராக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய விஷயத்தை கட்டுப்படுத்த வேண்டும். முடிவுகள் எடுப்பது கேப்டன், பயிற்சியாளர் கையில் இருக்கிறது. அதை விடுங்கள்.

ஆனால் இந்த தனிப்பட்ட தாக்குதலை நான் முறையில் விரும்பவில்லை. ஏனென்றால் நாம் எப்போதும் குற்றம் சொல்ல யாரையாவது தேடுகிறோம். நாம் ஏன் இதைச் செய்கிறோம்? இது ஒரு விளையாட்டு. ஒரு அணியை நிர்வகிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. தோல்வியால் கம்பீரும் வலியை சந்தித்திருப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்காக ஒருவரை நீக்குவது நன்றாக இருக்கலாம், ஆனால் அது அப்படி இருக்கக்கூடாது. நான் ஒருபோதும் அப்படிப்பட்ட நபராக இருந்ததில்லை. இது யாரையும் ஆதரிப்பது பற்றியது அல்ல, கம்பீர் ஒன்றும் என் உறவினர் அல்ல. நாம் செய்த 10 தவறுகள் பற்றி என்னால் சொல்ல முடியும். தவறுகள் நடக்கும். ஆனால் இங்கே யார் வேண்டுமானாலும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

1 More update

Next Story