கம்பீர் மைண்ட் வாய்ஸ்... - காமெடி நடிகர் சதீஷ் கிண்டல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் மேலும் ஒரு பேரிடி விழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.
இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்நிலையில் கவுதம் கம்பீரை கிண்டலத்து காமெடி நடிகர் சதீஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கம்பீர் மைண்ட் வாய்ஸ்….எல்லாரும் ஓவரா பேசராங்க… பேசாம ஹர்ஷித் ராணாவை டெஸ்ட் கேப்டனா அறிவித்து காமெடி (Fun) பண்ணுவோமா…?!?!” என்று பதிவிட்டுள்ளார்.






