இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி


இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி
x

ராபின் ஸ்மித் 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் ஸ்மித் (வயது 62). பேட்ஸ்மேன் ஆன இவர் 1988ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராபின் ஸ்மித் 4 ஆயிரத்து 236 ரன்கள் குவித்துள்ளார். இவர் 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே, உடல்நலக்குறைவு, மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ராபின் ஸ்மித் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ராபின் ஸ்மித் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராபின் ஸ்மித்தின் குடும்பத்தினருகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ரிச்சர்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story