ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க...டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை விவரம்

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
புதுடெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல்முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன . இதில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 15ம் தேதி நடைபெற உள்ளது.
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை:
இந்தியா - அமெரிக்கா: பிப்ரவரி 8 (அகமதாபாத்)
இந்தியா - நமீபியா: பிப்ரவரி 12 (டெல்லி)
இந்தியா - பாகிஸ்தான்: பிப்ரவரி 15 - (கொழும்பு )
இந்தியா - நெதர்லாந்து : பிப்ரவரி 18 (மும்பை) .






