இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவு: இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது..?


இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவு: இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது..?
x

image courtesy:BCCI

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரின் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதனையடுத்து இந்திய அணியின் அடுத்த ஆட்டம் எப்போது? என்பது குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்த மாதம் நடைபெற இருந்த இந்தியா-வங்காளதேசம் வெள்ளைப்பந்து தொடர் (டி20 மற்றும் ஒருநாள்) ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது? என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தொடர் குறித்த தகவலை இங்கு காணலாம்..!

இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இதனால் இந்திய அணிக்கு ஏறக்குறைய அடுத்த ஒரு மாத காலம் எந்த போட்டிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்தியா- வங்காளதேசம் தொடர் ரத்தான நிலையில் அதே அட்டவணையில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஒருவேளை அது நடக்கும் பட்சத்தில் இந்திய அணி இந்த மாதமே அடுத்த போட்டியில் விளையாடும். ஆனால் இந்த தொடர் குறித்து எந்த வித அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story