இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களில் ஆல்அவுட்


இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களில் ஆல்அவுட்
x
தினத்தந்தி 1 Aug 2025 4:13 PM IST (Updated: 1 Aug 2025 4:17 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் 'டிரா' வில் முடிந்தது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், ஜோஷ் டாங்கு தலா 2 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 69.4 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கருண் நாயர் 57 ரன்களில் அவுட் ஆனார்.இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.

1 More update

Next Story