துலீப் கோப்பை: ஷர்துல் தாகூர் தலைமையிலான மேற்கு மண்டல அணி அறிவிப்பு.. ரகானே, புஜாராவுக்கு இடமில்லை


துலீப் கோப்பை: ஷர்துல் தாகூர் தலைமையிலான மேற்கு மண்டல அணி அறிவிப்பு.. ரகானே, புஜாராவுக்கு இடமில்லை
x

image courtesy:PTI

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந் தேதி தொடங்குகிறது.

மும்பை,

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் கால்பதிக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான மேற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் தலைமையிலான அந்த அணியில் இந்திய நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால், கெய்க்வாட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அந்த அணியில் முன்னணி வீரர்களான ரகானே மற்றும் புஜாராவுக்கு இடமளிக்கப்படவில்லை.

மேற்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:-

ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்யா தேசாய், ஹர்விக் தேசாய், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்மீத் படேல், மனன் ஹிங்ராஜியா, சவுரப் நாவலே, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன்,தர்மேந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சான் நாக்வாஸ்வாலா.

1 More update

Next Story