துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி 556 ரன் குவிப்பு


துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி 556 ரன் குவிப்பு
x

157 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 556 ரன்கள் குவித்து 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

பெங்களூரு,

62-வது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேற்கு- மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய மேற்கு அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மத்திய மண்டல அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலை கண்டது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் அந்த அணி 157 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 556 ரன்கள் குவித்து 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதிகபட்சமாக சுபம் ஷர்மா 96 ரன்னும், உபேந்திர யாதவ் 87 ரன்னும், கேப்டன் ரஜத் படிதார் 77 ரன்னும் சேர்த்தனர்.

வடக்கு மண்டல அணிக்கு எதிரான மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய தெற்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 536 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது. 3-வது நாளில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வடக்கு அணி ஆட்ட நேரம் முடிவில் 79 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. சுபம் கஜூரியா 128 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

1 More update

Next Story