பாகிஸ்தானுக்கு செல்லும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.. எப்போது தெரியுமா..?


பாகிஸ்தானுக்கு செல்லும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.. எப்போது தெரியுமா..?
x

image courtesy:ICC

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க உள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (அக்டோபர்) பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் போட்டிகளும், 2-வதாக டி20 மற்றும் கடைசியாக ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 12-ம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணியின் முதல் போட்டி இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் தொடர்களின் முழு அட்டவணை:

முதல் டெஸ்ட் - அக்டோபர் 12-16-ம் தேதி

2-வது டெஸ்ட் - அக்டோபர் 20-24-ம் தேதி

முதல் டி20 போட்டி - அக்டோபர் 28-ம் தேதி

2-வது டி20 போட்டி - அக்டோபர் 31-ம் தேதி

3-வது டி20 போட்டி - நவம்பர் 1-ம் தேதி

முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 4-ம் தேதி

2-வது ஒருநாள் போட்டி - நவம்பர் 6-ம் தேதி

3-வது ஒருநாள் போட்டி - நவம்பர் 8-ம் தேதி

1 More update

Next Story