விராட் கோலியின் சாதனை சமன்...39 வயதில் வரலாறு படைத்த டேவிட் வார்னர்

ரோகித் சர்மாவை பின்தள்ளி, விராட் கோலிக்கு இணையாக 9 சதங்களை டேவிட் வார்னர் எட்டினார்.
சென்னை,
ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்(39) , கடந்த 3-ம் தேதி பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தனது 9வது டி20 சதத்தைப் பதிவு செய்த அவர், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்தார்.
65 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் குவித்த வார்னர், நடப்பு பிக் பாஷ் சீசனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தார். இதன்மூலம் ரோகித் சர்மாவை பின்தள்ளி, விராட் கோலிக்கு இணையாக 9 சதங்களை எட்டினார்.
அதிக டி20 சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (22), பாபர் அசாம் (11) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். ரிலீ ரோசோ, விராட் கோலி, டேவிட் வார்னர் மூவரும் தலா 9 சதங்களுடன் அடுத்த இடங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஒரு சதம் அடித்தால், வார்னர் மூன்றாவது அதிக சதம் அடித்த வீரர் ஆவார்.






