பீகார் அணி 574 ரன்கள் குவிப்பு: உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் - அஸ்வின்

உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மும்பை,
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.'பிளேட்' வகைப்பிரிவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அருணாசலபிரதேச அணிக்கு எதிராக பீகார் அணி 6 விக்கெட்டுக்கு 574 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது.இந்த நிலையில், உள்ளூர் அணிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சில உள்ளூர் அணிகளுக்கு மத்தியில் தரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இது அணிகளுக்கு இடையே சரியான போட்டி உருவாகும் வாய்ப்பை முழுமையாக நீக்குகிறது.வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
அருணாசலப்பிர தேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும்.என தெரிவித்துள்ளார்.






