இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் தேர்வு: 28-ந் தேதி நடக்கிறது


இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் தேர்வு: 28-ந் தேதி நடக்கிறது
x

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புதிய தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதில் புதிய தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. 2022-ம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டி விட்டதால் வாரிய விதிமுறைப்படி பதவியில் தொடர முடியாது. இதனையடுத்து அவர் இந்த மாத தொடக்கத்தில் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இதனால் தற்போது தலைவர் பதவி காலியாக இருக்கிறது. எனவே பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். நிர்வாகிகள் புதிய தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது. தலைவர் பதவிக்கான ரேசில் இடைக்கால தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஐ.பி.எல். சேர்மனாக இருக்கும் அருண் துமால் தொடர்ந்து 6 ஆண்டுகளாக வாரிய நிர்வாகியாக இருப்பதால் அந்த பதவியில் தொடர இயலாது. இதனால் அவருக்கு பதிலாக ஐ.பி.எல். சேர்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

1 More update

Next Story