ஆசிய கோப்பை: பாக்.இல்லை.. இந்த 2 அணிகள்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு


ஆசிய கோப்பை: பாக்.இல்லை.. இந்த 2 அணிகள்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
x
தினத்தந்தி 6 Sept 2025 4:53 PM IST (Updated: 6 Sept 2025 4:54 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ர இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது கணிப்பின் படி, இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இலங்கையிடம் எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்படக்கூடிய அணி உள்ளது. இலங்கை ஒரு நல்ல அணி. அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் ஆச்சரியப்பட மாட்டேன். இந்தியா-இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. நாங்கள் மற்றும் அவர்கள் நன்றாக விளையாடினால் அது சாத்தியமாகும்” என்று கூறினார்.

1 More update

Next Story