ஆசிய கோப்பை: பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடலாம் - காரணத்துடன் விளக்கிய இந்திய முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை: பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடலாம் - காரணத்துடன் விளக்கிய இந்திய முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடைபெறுகிறது.

மும்பை,

துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆன ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். இருப்பினும் அவர் ஆசிய கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், பணிச்சுமை காரணமாக 2 போட்டிகளில் இருந்து ஒதுங்கி கொண்டார். இதனால் இந்த ஆசிய கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடலாம் என்று இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ஒரு போட்டிக்கு 4 ஓவர்களை மட்டுமே பும்ரா வீசுவார். அதுவும் தொடர்ச்சியாக அவர் நான்கு ஓவர்களை வீசுவது கிடையாது. எனவே இந்த போட்டியில் விளையாடுவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நான் நினைக்கிறேன். அவருக்கு எந்தப் பணிச்சுமையும் இருக்காது. அந்த வகையில் பும்ரா எந்த ஒரு பிரச்சனையும் இன்றி இந்த தொடர் முழுவதும் விளையாட முடியும்” என்று கூறினார்.

1 More update

Next Story