இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு... முதலிடம் யார் தெரியுமா..?


இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய அம்பத்தி ராயுடு... முதலிடம் யார் தெரியுமா..?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Aug 2025 8:45 AM IST (Updated: 1 Aug 2025 8:45 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு அண்மையில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, இந்திய அணியின் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன்களின் பெயர்கள் கூறப்பட, அம்பத்தி ராயுடு அவர்களுக்கான தரவரிசையைக் கூறினார். முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெயர் கூறப்பட, அவருக்கு மூன்றாவது இடத்தை ஒதுக்கினார் அம்பத்தி ராயுடு, அவருக்கு அடுத்தபடியாக கபில் தேவுக்கு 4-வது இடத்தைக் கொடுத்தார்.

ரோகித் சர்மாவின் பெயர் கூறப்பட அவரை இந்திய அணியின் இரண்டாவது சிறந்த கேப்டன் என தவரிசைப்படுத்தினார். இந்த தரவரிசையில் விராட் கோலிக்கு ஐந்தாவது இடமும், முகமது அசாரூதினுக்கு ஆறாவது இடமும் ஒதுக்கினார்.

தரவரிசையில் முதலிடம் மட்டும் மீதமிருக்க, அதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஒதுக்கினார் ராயுடு. இந்திய அணியின் சிறந்த கேப்டன்களுக்கான தரவரிசையில் தோனிக்கு அவர் முதலிடத்தை வழங்கினார்.

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக அம்பத்தி ராயுடு வரிசைப்படுத்திய கேப்டன்கள் பின்வருமாறு,

1. மகேந்திர சிங் தோனி, 2. ரோகித் சர்மா, 3. சவுரவ் கங்குலி, 4. கபில் தேவ், 5. விராட் கோலி, 6. முகமது அசாரூதின்

1 More update

Next Story