இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு


இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
x

இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா , பாகிஸ்தான் மோதுகின்றன.

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா , பாகிஸ்தான் மோதுகின்றன.

இதில், மாத்ரே தலைமையிலான இந்திய அணி, யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story