5-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை கைப்பற்றிய ஆகாஷ் தீப்


5-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டை கைப்பற்றிய ஆகாஷ் தீப்
x

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன பென் டக்கெட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டனர். இதனால் ரன் ரேட் வேகமாக நகர்ந்தது. வெறும் 7 ஓவர்களில் இங்கிலாந்து அணி 50 ரன்களை கடந்தது.

இவர்களின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இங்கிலாந்துக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்த இந்த கூட்டணியை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் உடைத்தார். அவரது பந்துவீச்சில் பென் டக்கெட் (43 ரன்கள்) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் கூட்டணி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து கேப்டன் ஆலி போப் களமிறங்கியுள்ளார்.

தற்போது வரை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 109 ரன்கள் அடித்துள்ளது. கிராவ்லி 52 ரன்களுடனும், ஆலி போப் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து இன்னும் 115 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளது. இத்தகைய சூழலில் தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

1 More update

Next Story