2வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு


2வது டெஸ்ட்:  இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்

கவுகாத்தி,

இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா:

கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரிஷப் பண்ட் (கேப்டன் ), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென் ஆப்பிரிக்கா:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா, டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ்.

1 More update

Next Story