தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி தோல்வி


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 3 Dec 2025 11:10 PM IST (Updated: 3 Dec 2025 11:12 PM IST)
t-max-icont-min-icon

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது.

ராய்ப்பூர்,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்த இருவரும் சதம் விளாசினர். கெய்க்வாட் 105 ரன்களிலும், கோலி 102 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அந்த அணியின் யான்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது.

குயிண்டன் டிகாக் 8 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவது விக்கெட்டுக்கு ஏய்டன் மார்க்கரம் உடன் கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடக்க வீரராக களமிறங்கிய எய்டம் மார்க்கரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர், 10 பவுண்டரிகளை எடுத்த அவர் 98 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய நான்காவது சதத்தை அவர் எடுத்தார். பிரவீஸ் ஆட்டம் போட்டியை தலைகீழ் திருப்பி போட்டது. மேத்தீவ் பிரிட்ஸ்க்கி 68 ரன்களில் வெளியேறினார். மார்க்கோ ஜான்சன் இந்த போட்டியில் இரண்டு ரன்களில் வெளியேறினார். ஆனால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் கடைசிவரை நின்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றனர்.

1 More update

Next Story