'என் மீது மோது’ என டிக்டாக்கில் பாடல் பாடிக்கொண்டே கார் ஓட்டி விபத்தில் சிக்கிய மாணவி; வைரல் வீடியோ


என் மீது மோது’ என டிக்டாக்கில் பாடல் பாடிக்கொண்டே கார் ஓட்டி விபத்தில் சிக்கிய மாணவி; வைரல் வீடியோ
x

விபத்தில் கெத்லின் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

வாஷிங்டன்,

அமேரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த நர்சிங் மாணவி கெத்லின் மெக்கட்ஷென். இவர் கடந்த வாரம் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். காரை ஓட்டிக்கொண்டே டிக்டாக்கில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

பிரபல அமெரிக்க பாடகி பிரட்னி ஸ்பெயர்ஸ் பாடிய ’மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி’ (ஹிட் மீ பேபி ஒன் மோர் டைம்) என்ற பாடலை டிக்டாக் வீடியோவில் பாடிக்கொண்டே கெத்லின் மெக்கட்ஷென் கார் ஒட்டியுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக கெத்லின் மெக்கட்ஷெனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கெத்லின் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், அவரின் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story