ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்


ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்
x
தினத்தந்தி 8 Dec 2025 9:04 PM IST (Updated: 9 Dec 2025 1:54 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

வாஷிங்டன்,

இன்று தொழில்நுட்பம் பெருகிவிட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வருகைக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் உண்மையா, பொய்யா என்று கண்டறிய முடியாத அளவுக்குச் சவாலாகி வருகின்றன. இன்று ஏஐ மூலம் நடக்காததை நடந்தது மாதிரியாக நம்ப வைத்து ஒரு சிலர் ஏமாற்றி வருகின்றனர். இதை வைத்துக்கொண்டு குற்றங்களைப் புரியத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதில் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் தனது வீட்டு கதவை உடைத்துக் கொண்டு ஒருவர் உள்ளே வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸில் புகாரளித்தார் ஷினால்ட் (32) என்ற இளம்பெண்.

குற்றத்திற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், அவர் காட்டிய புகைப்படம் ஏஐஆல் உருவாக்கப்பட்டது என்பதை போலீசார் தீவிர விசாரணையில் கண்டறிந்துள்ளனர். மன உளைச்சலால் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக ஷினால்ட் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதனைதொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அந்த இளம்பெண்ணிடம் கண்டிப்புடன் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

1 More update

Next Story