ரஷியாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை


ரஷியாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை
x
தினத்தந்தி 5 Aug 2025 8:57 AM IST (Updated: 5 Aug 2025 11:51 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாஸ்கோ.

600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்துள்ளது.

கடந்த வாரம் ரஷியாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரஷியா ரியா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இது வரலாற்றில் பதிவான க்ராஷென்னினிகோவ் எரிமலையின் முதல் வெடிப்பாகும்" என்று தெரிவித்துள்ளது. இந்த எரிமலையின் கடந்த வெடிப்பு 1463-ஆம் ஆண்டில் (40 ஆண்டுகள் முன்/பின் வேறுபாடு இருக்கலாம்) நடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா அரசு தரப்பில் கூறுகையில், 6000 மீட்டர் உயரம் வரை சாம்பல் மேகம் உயர்ந்துள்ளது. சாம்பல் மேகம் பசிபிக் கடலுக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மனித வசிப்பிடங்களுக்கு உடனடி அபாயம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பிற்கு (Orange aviation alert )ஆரஞ்சு அவியேஷன் அலார்ட் அளிக்கப்பட்டுள்ளது, இது விமான போக்குவரத்துக்கு அபாய அளவைக் குறிக்கிறது. எரிமலை வெடிப்புகளுக்கு மத்தியில், சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு செயல்பாடு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

1 More update

Next Story